கவிக்குடில்

March 21, 2007

பாராட்டுகிறோம்

Filed under: கருத்து — kavikkudil @ 8:09 am

மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி
புதுதில்லி
எளிய கவிதைகளுக்காகப் புகழ்பெற்ற கவிஞர் மு.மேத்தா, தமிழ் இலக்கிய படைப்பிற்காகச் சாகித்ய அகாதெமி விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

‘கண்ணீர்ப் பூக்கள்’ என்ற நூல் மூலம் புதுக்கவிதையில் புகழ் பெற்றவர்; ‘சோழ நிலா’ என்ற புதினத்திற்காகப் பரிசு பெற்றவர்; ‘என் மனவானில்சிறகை விரிக்கும்’ எனத் திரைப் பாடல்களிலும் முத்திரை பதித்தவர், மேத்தா.

ஏற்கெனவே பல்வேறு விருதுகள் பெற்ற இவர், கல்லூரிப்பேராசிரியராகப் பணியாற்றி வருபவர். வானம்பாடிக் கவிஞர்களின் வரிசையில் வருபவர். அகில இந்திய அளவில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கான அகாதெமி விருது வழங்கும் விழா, 2007 பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தில்லியில்நடைபெற உள்ளது.

இவ்விழாவில் கவிஞர் மு.மேத்தாவிற்கு சாகித்ய அகாதெமி விருதும் ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.இதற்கான அறிவிப்பு, தில்லியில் டிசம்பர் 21 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

கவிஞர் மு. மேத்தா அவர்களுக்கு
சென்ற ஆண்டுக்கான
சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருது மு.மேத்தா அவர்களின்
‘ஆகாயத்துக்கு அடுத்தவீடு’ நூலுக்காக வழங்கப்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் கவிதையுலகில்
சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கும்
பேராசிரியர் கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு கிடைத்திருப்பது
அனைவருக்கும் மகிழ்வளிக்கும் செய்தி.

புதுக்கவிதை உலகில்
புதியவர்களின் நுழைவுக்கு வாசலாக இருந்து
ஊக்கப்படுத்திய முன்னத்திஏர்களில்
குறிப்பிட தக்கவர் மு. மேத்தா.

ஆகவே புதியவர்களின் அன்பும், பாராட்டும்
அவருக்கு குவிந்தவண்ணம் உள்ளது.

நாமும்.. அன்போடு பாராட்டுவோம்.. வாழ்த்துவோம்

Advertisements

Blog at WordPress.com.